சிறந்த கணக்கறிக்கையில் வல்வை நகரசபை முதலிடம், பருத்தித்துறை இரண்டாம் இடம். இரண்டிலும் பெண்கள் செயலர்கள்!!!!
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2023 (புதன்கிழமை)
2022 ஆம் ஆண்டிற்கான அரச துறைகளில் சிறந்த கணக்கறிக்கை தயாரித்தலில் வல்வெட்டித்துறை நகரசபை முதலாம் இடத்தையும், பருத்தித்துறை நகரசபை இரண்டாம் இடத்தையும், வவுனியா நகரசபை மூன்றாம் இடத்தையும் பெற்று முறையே தங்கம், வெள்ளி, வெண்கல விருதுகளைப் வென்றுள்ளன.
அனுராதபுரத்தில் உள்ள மத்திய மாகாண வளாகத்தில் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்விலேயே இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
வடமராட்சிப் பிரதேசத்தில் இருக்கக் கூடிய இரண்டு நகரசபைகளிலும் இலங்கை நிர்வாக சேவை பெண் செயலாளர்களே தற்போது கடமையாற்றிவருவது குறிப்பிடத் தக்கது.
இதேவேளை பிரதேச சபைகளில் வவுனியா வடக்கு முதலாம் இடத்தையும் துணுக்காய் பிரதேச சபை இரண்டாம் இடத்தையும், வலிகாமம் மேற்கு பிரதேச சபை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.