நடைபெற்றுக்கொண்டிருக்கும் கணபதி பாலர்பாடசாலையின் கட்டடப் பணிகளில் தற்போது முதலாம் கட்ட வேலைகள் நிறைவடைந்து இரண்டாம் கட்டவேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மூன்று கட்டங்களாக நடைபெறும் இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமான அத்திவாரமிடுதலும், தூண்போடுதலையும் தொடர்ந்து மண் நிரவுதல் நிறைவடைந்து இரண்டாம் கட்டமாக கீழ்த்தள பாலர் பாடசாலைக்கான தளமிடுவதற்கான பலகைகள் பொருத்தப்பட்டுவருகின்றது ,
பாலர் பாடசாலையானது 80 X 30 அடி விஸ்திரணத்தில் நவீன கற்றல் செயற்பாடுகளுக்கு ஏதுவாக கணனிப்பிரிவு (Computer Unit) கட்புல, செவிப்புல அலகு (Audio, Video Unit), நூலகம் மற்றும் அலுவலகம் என்பவற்றினை உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கீழ்த்தளத்தில் 40 X 10 அடி களஞ்சிய அறையும் (கிணறு உள்ளடங்கலாக), 80 X 10 அடி வெளிப்புற விறாந்தையும் மற்றும் 20 X 10 அடி மலசலகூடத் தொகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாம் கட்டமாக 90 X 40 அடி விஸ்தீரணத்தில் கலையரங்கமும் அமைக்கப்படவுள்ளது.
எனவே வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் அங்கத்தவர்கள், அபிமானிகள், நலன்விரும்பிகள் மற்றும் கணபதி பாலர் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரிடமிருந்தும் பெரும் நிதிப்பங்களிப்பினை மிகவும் தயவாக வேண்டிநிற்கின்றோம்.
கட்டடம் அமைக்கப்பட்டுவரும் நிலப்பரப்பானது நெடியகாடு அபவிருத்திச் சபையால் கொள்வனவு செய்யப்பட்டு கணபதி படிப்பகத்திற்கென அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.