வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று 21.05.16 நிறைவுபெற்றது. நேற்று காலை விநாயகப் பெருமான் தீர்தோற்சவ நிகழ்வு ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான் நெடியகாட்டு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயிலில் மாலைவரை வீற்றிருந்தார்.
மாலை 7 மணியளவில் நெடியகாட்டு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தில் இருந்து விநாயகப் பெருமான் புறப்பட்டு, வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதி வழியாக சுவாமி வீதியுலா இடம்பெற்றது.
இரவுத் திருவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில் மருதடி முதல் பழைய பொலிஸ் நிலையம் வரையான பகுதிகள் அலங்கரிக்கப்பட்டிருந்துடன் இசைக்குழுக்களின் இசைக்கச்சேரிகளும் இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.