வல்வெட்டித்துறை கம்பர்மலையில் அமைந்துள்ள அமரர் வேலுப்பிள்ளை நினைவாலய வளாகத்தில் முழுநிலவு நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்புரைகள், பட்டிமன்றம் மற்றும் சிறுவர்களிற்கான போட்டிகள் என்பன இடம்பெற்றிருந்தன.
அமரர் வேலுப்பிள்ளை நினைவாலயத்தினரால் நேற்று மாலை நடாத்தப்பட்டிருந்த இந்த நிகழ்வு மாலை 6 மணியளவில், நினைவாலயகத் தலைவர் திரு.வி.பாஸ்கரன் தலமையில் ஆரம்பமானது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு. சின்னத்தம்பி மார்க்கண்டு, திருமதி லக்ஷ்மி அம்மா சின்னத்தம்பி ஆகியோர் சமுகமளித்து நிகழ்வை சிறப்பத்திருந்தனர்.
உளவியல் துறை மற்றும் மனித உரிமை சட்டக்கல்வி பயிற்றுனர் திரு.வி.சுமதீஸ்வரன் அவர்கள் நிகழ்வில் சிறப்புரை ஆற்றியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கலையரங்கமும், திருமதி சுரேகா பரமானந்தம் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றது.
விழாவின் முடிவில் சிறுவர்களிற்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.
முழுநிலவு நிகழ்வானது இனிவரும் பிரதி மாதம்தோறும் நாடத்தப்படவுள்ளதாகவும் இதில் விரும்பிய அனைத்து சிறுவர்களும் பங்குபற்றமுடியும் என விழா ஏற்பாட்டாளர்களான வேலுப்பிள்ளை நினைவாலயக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.