வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுக்கு மேற்காக கடந்த 4 தினங்கள் முன்பு உருவான தாழமுக்கம் தற்போது அதி தீவிர புயலாக ( Very severe Cyclonic Storm)மாறியுள்ளது. இதற்கு Yaas (யாஸ்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கை நேரம் 1430 மணிக்கு, இந்தியாவின் பாரதீப் (Paradip, Odisha) துறைமுகத்துக்கு தென் கிழக்கு திசையில் சுமார் 225 கடல் மைல்கள் தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த அதி தீவிர புயல், தற்பொழுது வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டுள்ளது.
தொடர்ந்து வடக்கு - வட மேற்கு திசையில் நகரும் புயல் நாளை காலை வடக்கு ஒடிசா - மேற்கு வங்காளத்துக்கு இடையிலான பகுதியில், பாரதீப் துறைமுகம் (Paradip port) மற்றும் சாகர் தீவுக்கு (Sagar Island) இடையில் கரையைக் கடக்கவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.