14 வருடங்களின் பின்னர் தொலைத்த பேர்சை அதிக பணத்துடன் பெற்ற நபர்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2015 (திங்கட்கிழமை)
குரோசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தொலைந்து போன பேர்சை 14 வருடங்களின் பின்னர், தொலைக்கும்போது வைத்திருந்த பணத்தை விட அதிக பணத்துடன் திருப்பிபெற்றுள்ளார்.
முதலில் தன்னுடன் யாரோ பகிடிசெய்வதாக நினைத்த குரோசியாவின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த “Ivica Jerkovic” என்னும் நபர், குறித்த பேர்சை பரிசோதித்துப் பார்த்தபோது அதில் பணம் உண்மையாகவே இருந்தது என்று “24 Sata daily” என்னும் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளர்.
14 வருடங்களுக்கு முன்னர் தனது வீட்டின் கூரையை திருத்துவதற்காக வங்கி ஒன்றில் சுமார் 1000 யூரோ பெறுமதியான பணத்தை எடுத்திருந்ததாகவும், ஒரு விருந்து உபசாரத்தின் போதோ அல்லது குறித்த விருந்து உபசாரத்தின் போது உடல் நலமற்ற நண்பர் ஒருவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போதோ பேர்சை தொலைத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.
பேர்சை அனுப்பியவர் தனது விபரம் எதனையும் தெரிவிக்கவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.