அகலப்படுத்தப்பட்ட பனாமா கால்வாய் அடுத்த வருடம் திறக்கப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2015 (சனிக்கிழமை)
அகலப்படுத்தப்பட்ட பனாமா கனல் (Panama Canal) அடுத்த வருடம் திறக்கப்படும் என எதிர்பார்க்கக்படுகின்றது. இதனால் தற்பொழுதுள்ள உள்ளதைவிட 3 மடங்கு அளவுடைய கொள்கலன் கப்பல்கள் (14,000 Containers of freight) பசுபிக் சமுத்திரத்தையும் அட்லாண்டிக் சமுத்திரத்தையும் இரு வழிகளில் இந்த சிறிய நீர் நிலையூடாக கடந்துசெல்லமுடியும்.
பனாமா கால்வாயின் 100 வருட தினத்தில் இந்த வருடம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட திட்டம், கணிப்பிடப்பட்ட 5.25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலாக மேலும் 2.39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவான நிலையில் அடுத்த வருடமே திறக்கப்படவுள்ளது.
உலகின் 5 வீதமான கப்பல் போக்குவரத்து அதிலும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் பனாமா கால்வாய் ஊடாகவே இடம்பெறுகின்றது.
இது இவ்விதம் இருக்க நிக்கரகுவா (Nicaragua) கடந்த வருடம் 50 மில்லியன் பெரும் கால்வாய் திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. 5 வருடத்தில் முடிவைடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தினால் பனாமா கால்வாயில் பயணிக்கக் கூடிய கப்பல்களை விட பெரிய கப்பல்கள் பயணிக்கும் முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.