பளை பகுதியில் அமைந்துள்ள மின்பிறப்பாக்கும் காற்றாடிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2015 (வெள்ளிக்கிழமை)
கீழே படங்களில் காட்டப்பட்டுள்ளவை இலங்கையின் வட பகுதியில் முதலாவதாக அமையும் கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் பிறப்பாக்கும் காற்றாடிகள் ஆகும்.
இந்தத் திட்டம் வடமாகாணசபையினால் வெளிநாட்டு நிதியுதவியுடன் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 80 அடி உயரம் கொண்ட மொத்தம் 16 காற்றாடிகள் கிளிநொச்சியின் பளையை அண்டிய புலோப்பளை, பூநகிரி, மற்றும் வள்ளிமுனை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
காற்றாடிகள் Juli power Private Ltd மற்றும் Bitta power Private Ltd ஆகியவற்றினால் அமைக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.