யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் கோட்டலில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை யாழ் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மேற்கொண்டுள்ளார்.
நாளை மறுதினம் 14 ஆம் திகதி வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகக்சேரி ஆகிய நகரசபைகளுக்கும் நல்லூர், சாவகச்சேரி, வலி தென்மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கும் பயிற்சிப் பட்டறை இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்தப் பயிற்சிப் பட்டறை SLILG மற்றும் UNDP ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, யாழ் மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில், 15 உள்ளூராட்சி மன்றங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திலும் 2 17 உள்ளூராட்சி மன்றங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகத்திலும் இயங்கி வருகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.