பிரிட்டிஷ் சிப்பிகளை (British oysters) ஆங்கிலக் கால்வாயினூடு காவிச் சென்று, உலகில் முதலாவது சரக்கினை எடுத்துச் சென்ற ஆளில்லா கப்பல் (Unmanned ship) என்னும் பெருமையைப் பெறுகின்றது Sea Kit என்னும் மிகச் சிறிய கப்பல்.
40 அடி நீளமான இந்தக்கப்பல் தனது முதலாவ்து பயணத்தில் 5 கிலோ எடை கொண்ட சிப்பிகளை காவியதுடன், திரும்பிய பயணத்தில் பெல்ஜியன் பியர்களை காவி வந்திருந்தது.
மணிக்கு 4 கடல் மைல்கள் வேகத்தில் சென்ற கப்பலின் மொத்த 22 மணி நேரப் பயணமும் தொலைக்கட்டுப்பாடு சாதனம் மூலம் இருவரால் மேற்கொள்ளப்பட்டது.
பூரண கடல் வழிப் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் பொருட்டு, குறித்த கப்பலில் Cameras, radar, microphones, thermal imaging and a back-up autonomous system என்பன பொருத்தப்பட்டிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.