மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 132 ஆவது இடத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2015 (வெள்ளிக்கிழமை)
உலகில் மகிழ்ச்சியாகவுள்ள நாடுகளின் பட்டியலில் (World’s Happiness Report 2015) ஆய்வு நடத்தப்பட்ட 158 நாடுகளில் இலங்கை 132 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 2015ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கல்வியாளர்கள் குழு ஒன்றினால் மக்களின் வாழ்க்கை தரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, தலா வருமானம்,ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
லண்டன் பொருளியல் கல்லூரியில் நன்றாக உள்ளவர்கள் திட்டத்தின் தலைவராக உள்ள ரிச்சர்ட் லேயார்ட், அமெரிக்க பொருளியலாளரான ஜெப்ரி சச்ஸ் ஆகியோரினால் மேற்படி பட்டியல் மேற்பார்வை செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் ஸ்விட்சர்லாந்து முதலாமிடத்தையும், ஐஸ்லாந்து இரண்டாமிடத்தையும், டென்மார்க் மூன்றாமிடத்தையும் வகிக்கின்றன. இலங்கையின் அயல் நாடுகளான பூட்டான்-79 பாகிஸ்தான்-81, பங்களாதேஷ்-109, இந்தியா-117, நேபாளம் -121 ஆம் இடங்களை வகிக்கின்றன. இந்த பட்டியலில் இறுதியாக உள்ள 10 நாடுகளில் ஆப்கானிஸ்தான் ,ருவாண்டா, சிரியா,புரூண்டி போன்ற நாடுகளும் உள்ளடங்குகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.