பட்டம் விடச் சென்ற சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு: பருத்தித்துறையில் சோகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2019 (சனிக்கிழமை)
பருத்தித்துறை இன்பர்சிட்டியில் பட்டம் ஏற்றச் சென்ற சிறுவன் ஒருவன் தோட்டத்தில் உள்ள கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பட்டம் ஏற்றும்போது சிறுவன் தவறிக் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
17 வயதுடைய ஜெகன் ஆனந்த் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். ஆனந்த கடந்த ஆண்டு க.பொ.த. சாதரணதரப் பரீட்சையில் தோற்றியவர்.
ஆனந்த் வியாழக்கிழமை (12.12) மதியத்துக்குப் பின்னர் பட்டம் ஏற்றச் செல்கின்றேன் என்று வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார். மாலையாகியும் ஆனந்த் வீடு திரும்பவில்லை.
மாலை 6 மணிக்குப் பின்னர் வீட்டினர் ஆனந்த்தைத் தேடியுள்ளனர். ஆனந்த பட்டம் விடச் சென்ற தோட்டக் காணியில் உள்ள கிணற்றில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
தோட்டக் காணியில் உள்ள கிணறு சிறிய கட்டுள்ள கிணறு. அந்தக் கிணறு மக்களால் அதிகம் பாவிக்கப்படுவதில்லை. அந்தப் கிணறுக்குள் படிக்கட்டுக்களும் இல்லை.
கிணற்றில் இருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.