Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் - இலங்கையர் பயணித்த Lady R3 ரோலரும், முகவர்களின் நாடகமும்

பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2022 (சனிக்கிழமை)

“A ship that carries 306 Srilankan refugees strucked and thrashed by wind and now being sinking in between Philippines and Vietnam.Politicians please consider this and help those people in needs. Please convey this news  to UN . Share this news as soon as possible. Ship contact Number : +870776789032”

“306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருக்கிறது.அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு தேவைப்படும் மக்களுக்கு உதவுங்கள். தயவுசெய்து இந்த செய்தியை ஐ.நா க்கு  கூடிய விரைவில் பகிரவும்”

மேற்குறித்த செய்தி வியட்நாம் ஊடகங்களிலோ அல்லது சர்வதேச ஊடகங்களிலோ வருவதற்கு முன்னர், எம்மவர் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

வியட்நாம், சர்வதேச மற்றும் கடலியல் சார் செய்திச்சேவைகளின் தகவல்கள் அடிப்படையில், 3 தினங்கள் முன்பு நடந்து முடிந்த இலங்கை அகதிகள் கப்பல் பற்றிய செய்திகளின் சுருக்கம் பின்வருமாறு,

மீன்பிடி இழுவைப் படகு (Fishing trawler) பெயர் Lady R3. மியன்மாரில் பதிவு செய்யப்பட்டதாம்? (Myanmar-flagged trawler, “Lady R3)

குறித்த ரோலர் 303 Sri Lankan migrant களை ஏற்றிக்கொண்டு மியன்மாரில் இருந்து, 6000 கடல் மைல்கள் தொலைவில் உள்ள கனடாவுக்கு பயணித்துக் கொண்டிருந்தது.

6 ஆம் திகதி மாலை 6 மணி அளவில் ரோலர் ஆனது, தென்சீனக்கடலில் வியட்நாமின் Vung Tau துறைமுகத்திலிருந்து சுமார் 260 கடல் மைல்கள் தொலைவில் (09 degrees 20 minutes North latitude and 111 degrees 16 minutes East longitude) கடல் சீற்றத்துக்கு உள்ளாகி, கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புக, கப்பல் அபாயக் குரல் (Distress call) எழுப்பியது. 

MRCC Vietnam நவம்பர் 7 ஆம் திகதி  MRCC Sri Lanka விடமிருந்து Mayday Signal ஒன்றை பெற்றார்கள்.

(MRCC என்பதன் முழுப் பெயர் Mission Rescue Coordination centre)

MRCC Vietnam, குறித்த ரோலருக்கு அருகில் சென்று கொண்டிருந்த, ஜப்பானில் பதிவு செய்யப்பட்ட Car Carrier ஆன “Helios Leader””ஐ, ரோலரில் உள்ளவர்களை மீட்கும்படி பணித்தது. இதைவிட மேலும் 5  கப்பல்களை தயார் நிலையில் (Standby) இருக்குமாறு அறிவுறுத்தியது.

Helios Leader கப்பல் ஆனது,  7 ஆம் திகதி மாலை 3 மணிக்கு சம்பவ இடத்துக்கு விரைந்து 19 பெண்கள் 20 குழந்தைகள் உட்பட்ட 303 பேர்களை மீட்டது.

8 ஆம் திகதி மாலை, Helios Leader கப்பலானது, மீட்ட அனைவரையும் Vung Tau துறைமுகத்தில் வியட்நாம் அதிகாரிகளிடம் பாரம் கொடுத்தது.

ஒருவரும் இறக்கவில்லை, ஒருவரும் காயப்படவில்லை. (அபாய காலத்தில் அதுவும் 303 பேர்களுடன் சென்ற ஒரு ரோலரில் இவ்வாறு உயிர் இழப்போ காயங்களோ ஏற்படாதது ஆச்சரியமானதொரு விடயம்)

திட்டமிடப்பட்டதொரு சம்பவம் 

இது மிகவும் திட்டமிடப்பட்டதொரு நாடகம்.

அவ்வாறு இதுவொரு நாடகம் என ரோலரில் சென்றிருந்தவர்களுக்கு தெரிந்து இருக்கலாம், தெரியாமல் இருந்து இருக்கலாம்.  

ரோலர் மியன்மாரிலிருந்து கனடா நோக்கி......... எனக் குறிப்பிடப்பட்டாலும் மியன்மாரிலிருந்து தான் பயணத்தை  ஆரம்பித்தது என்று எந்தவொரு செய்தியும் உறுதிப்படுத்தவில்லை.

தென்சீனக்கடலில் மியன்மாருக்கு எந்தவொரு கடல் எல்லையுமில்லை.

ரோலரில் செய்மதி தொலைபேசி இருந்துள்ளது. செய்மதி தொலைபேசி இலக்கம் +870776789032. மியான்மார் ரோலர்களில் செய்மதி தொலைபேசி வசதி / அனுமதிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மியன்மாரில் நடப்பது இராணுவ ஆட்சி. இப்பொழுது சில வருடங்களாகத்தான் சாதாரண சிம் கார்ட்களே அனுமதிக்கப்பட்டுள்ளன.

செய்மதி தொலைபேசி உள்ள ரோலருக்கு, சர்வதேச கடற்பரப்பில் பயணிக்கும் கடற்கலங்களுக்குரிய MMSI என்னும் இலக்கம் இருப்பதை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

விடயம் இவ்வாறுதான் ஒழுங்கமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

அதாவது சர்வதேச கடற்பரப்பில் அதுவும் வியட்நாமுக்கு அண்மித்து ரோலரில் இருந்து அபாயம் (May day) எழுப்பவது என்றும் அவ்வாறு அபாயம் எழுப்பி உதவி வரும்பொழுது தங்கள் கனடா விருப்பத்தை கூறுவது என்று.

இதே பாணியை பல வருடங்கள் முன்பு நம் முகவர்கள் அவுஸ்திரேலியா கடல் எல்லைகளில் பின்பற்றினார்கள். அதாவது ரோலர்களில் அவுஸ்திரேலியா கரைகளுக்குள் சென்று, ரோலர் இயந்திர அறைக்குள் ஓட்டை போட்டு அபாயம் எழுப்பி - மீட்கப் பட்ட பின்னர் - அடைக்கலம் கேட்பது. ஆரம்பத்தில் அதீத வெற்றியும் பெற்றார்கள்.  

ஆரம்பத்தில் மனிதநேயத்துடன் இந்த சம்பவங்களைப் பார்த்த அவுஸ்திரேலியா, பின்னர் இதுவொரு "பக்கா மனிதக் கடத்தல்" என்று தெரிந்து, தற்போது உள்ளே நுழையமுடியாதபடி சகல வழிகளிலும் இறுக்கிவிட்டார்கள் . நம்மவர்கள்  ரூட்டை கனடாவுக்கு மாற்றிவிட்டார்கள்.

இந்த வருடம் மட்டும் 1300 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மூலம் செல்லும் பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவுஸ்திரேலியா அரசு படகு மூலம் தங்கள் நாட்டுக்குள் வரும் இலங்கையர்களை தடுப்பதில் 100 வீதம் வெற்றிகண்டுள்ளது. (100-percent interception rate)

ரோலரின் இயந்திர அறைக்குள் நீர் புக ஆரம்பித்து 1 நாள் சென்றுதான் மீட்பு இடம்பெற்றது. எனக்குத் தெரிந்து May day அறிவிப்பின் பின்னர், ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கப்பல்களுக்கு அனர்த்தம் ஏற்படுவது வழமை.  ஆனால் இங்கு அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

முகநூல் அறிவிப்பின் படி (மேலே) வியட்நாம் அதிகாரிகளின் ஈடுபாட்டை முகவர்கள் விரும்பியுள்ளார்கள் போல் தெரிகின்றது - மீட்புபணி இடம்பெற்ற பின்னர் ஐ.நாவை ஈடுபடுத்தி “தம்மை கனடாவுக்கு தான் அனுப்ப வேண்டும், இலங்கைக்கு அனுப்பினால் தற்கொலை செய்வோம்’ என்று அடம்பிடிக்க வேண்டும் என்று கூறவேண்டும் முகவர்களால் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் .

நேற்று முன்தினம் வந்த செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

நேற்று முகநூலில் உலாவிய ஒலிநாடா (முகவர் மற்றும் உறவினர் ஒருவருக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல்) ஒன்றிலும் இது உறுதிப்படுத்தப்படுகின்றது – "அவர்களை ஐநா பாரம் எடுத்துள்ளது. கனடாவுக்கு கேட்பார்கள் இல்லை என்றால் அவுஸ்திரேலியா, சுவிஸ் " என்று குறித்த முகவர் அடுக்கின்றார்.

உச்சபட்சமாக  அந்த முகவர், "கனடாவின் தமிழ் எம்.பி “கிலாரி கிளிங்டன்” தங்களுக்கு சார்பாக வந்துள்ளதாகக் கூறுகின்றார்" ஆகவே நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காமல் நிம்மதியாக படுத்து, தூங்கி, நித்திரை கொள்ளுங்கோ என மேலும் கூறுகின்றார். 

இது ஒரு திட்டமிடப்பட்ட சம்பவம், சாத்தியமற்ற கடற்பயணம் என்று நான் கூறுவதற்கான காரணங்கள்

* மியன்மாரிலிருந்து கனடா 6000 கடல் மைல்கள். பாதை பசுபிக் சமுத்திரம் ஊடாக, அதுவும் தற்போது நிகழும் Winter காலத்தில்.

* பெரிய வர்த்தக கப்பல்களில் பணி புரிபவர்களில் சிலர் இவ்வாறான Winter காலங்களில் கப்பல் Run பசிபிக் அல்லது அட்லாண்டிக் ஊடாக என்றால் நைசாக மறுதலிப்பது இன்றும் வழமை. காரணம் அவ்வளவு கடல் சீற்றம், உடலை உறைய வைக்கும் குளிர்.

* சராசரியாக Winter காலத்தில் பசுபிக் ஊடாக ரோலர் ஒன்றால் மணிக்கு 3 கடல் மைல்கள் தான் பயணிக்க முடியும். அப்படி என்றால் நம்மவர்கள் 303 பேரும் பயணித்த ரோலர், சுமார் 84 நாட்கள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டும் – சாத்தியமில்லை.

* குறித்த ரோலர் ஒரு Sub Standard Vessel, அதாவது தரமற்ற ஒரு கடற்கலம்,

* குறித்த ரோலர் அதிக பட்சம் 10 நபர்களை மாத்திரம் காவவே வடிவமைக்கப்பட்டது.

* ரோலர் எரிபொருள் கொள்ளளவு அதிக பட்சம் 30 நாட்கள். மீதி 54 நாட்களும்?

* ரோலர் நீர் வசதி (குடிக்க மற்றும் உணவுக்கு மட்டும், அதாவது பங்கீட்டு அடிப்படையில்) – 305 பேருக்கும் அதிக பட்சம் 1 வாரத்துக்கு மட்டும்  தான் போதும். ஏனைய 75 நாட்களும். வர்த்தகக் கப்பல் ஒன்றில் 25 மாலுமிகளுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 டொன் நீர் தேவை. (கப்பல் தொழிற்பாடுகளுக்கு வேறு 5 டொன் தேவை). குறித்த ரோலரில் 303 பேரை ஏற்றிய பின் 2 அல்லது 3 டொன்களுக்கு மேல் நீர் ஏற்ற வசதி இல்லை. பங்கீட்டை ஒரு சில நாட்கள் தான் செய்யலாம். தொடர்ச்சியாக செய்ய முடியாது. 

* உணவு – நீர் போன்ற கணக்குத் தான்.

* பசிபிக்கில் தற்போது வெப்பநிலை 5 பாகை அளவில். 35 பாகை வெப்பநிலையில் பழக்கப்பட்டவர்கள், TPA, Immersion Suit போன்ற எந்தவொரு குளிர்தாங்கி அங்கிகள் இன்றி – சில மணித்தியாலங்கள் கூட குளிர் தாங்காமல் Hypothermia – ஆதாவது குலப்பன் வந்து - பயணத்தின் ஆரம்ப நாட்களிலேயே இறந்து விடுவார்கள்.

* மருத்துவ வசதி – அப்படி ஒன்றும் குறித்த ரோலரில் இருக்க அறவே வாய்ப்பில்லை.

* எல்லாவற்றுக்கும் மேலாக Winter காலத்தில் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் சமுத்திரங்கள் உறுமிய வண்ணமே இருக்கும். வீரியம் கொண்ட தாழமுக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மிக பரந்த தேசத்தை ஆட்கொண்டு, பசிபிக் சமுத்திரத்தை தூக்கி அடித்த வண்ணம் இருக்கும். பசிபிக் மற்றும் அட்லாண்டிக் சமுத்திரங்கள் ஊடாக கப்பல்களில் பயணித்தவர்களுக்கு மட்டும் தான் இதன் தாக்கம் என்னவென்று புரியும்.

* கடந்த வருடம் One Apus என்றதொரு இராட்சத கொள்கலன் கப்பல் பசிபிக் சமுத்திரத்தில் கடல் சீற்றத்துக்குள் அகப்பட்டு 1500 மேற்பட்ட கொள்கலங்களை கடலுக்குள் இழந்தது. இதைவிட பல நூறு கொள்கலங்கள் சேதமாகின.

* அனுபவம் வாய்ந்த வர்த்தக கப்பல் மாலுமிகள் கூட பசுபிக் மற்றும் அட்லாண்டிக் சமுத்திரப்பயணங்களில் தோற்று இருக்கிறார்கள். ரோலர் எம்மாத்திரம்.  

இவ்வாறு இந்தப் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

ரோலர் மகா சமுத்திரம் ஊடு பயணிக்காது என்றால் அன்ன பூரணி பாய்மரக் கப்பல் எப்படி வல்வையில் இருந்து அமெரிக்கா சென்றது என்ற வாதம் எழலாம்.

அன்னபூரணி மேற்கொண்டது அறிவிக்கப்பட்டதொரு பயணம். கொழும்பு, சூயஸ், ஜீவ்ரோல்டர் என்று பல இடங்களில் நின்று நிதானிந்து தான் சென்றது. அன்னபூரணி எடுத்த கடற்பயண காலம் சுமார் 18 மாதங்கள்.

ஒருவேளை ரோலர் கனடா நோக்கித்தான் சென்று இருந்திருந்தால் – ரோலர் சில நாட்களில் மாயமாகியிருக்கும். உற்றார், உறவினர்கள் தவிர, ஏனையோருக்கு அது ஒரு செய்தியாக தெரிந்திருக்காது. எனது நண்பன் ஒருவனை பலவருடங்களாக காணவில்லை. ஊகம் - இவ்வாறானதொரு பயணம் மேற்கொண்டு கடலில் சங்கமித்து இருக்கலாம் என்றுதான்.

Lotus Tower ஐ எனக்கு எழுதித் தந்தாலும் இது போன்றதொரு பயணத்தை நான் கனவிலும் நினைக்கமாட்டேன்.

303 இலங்கையரில் அதிகம் தமிழர்களாகத் தான் இருப்பார்கள். 76 பேர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட செய்தி. இவர்களில் வல்வையர்கள் சிலரும் என்று உண்மையான வதந்தி.

ஆச்சரியமான விடயம் என்னவென்றால் தென் சீனக் கடல் தனது என்று கூறிக் கொண்டிருக்கும் இலங்கையின் நண்பன் சீனாவின் சத்தம் இங்கு மிஸ்ஸிங் என்பது தான்.

எனது இந்தப் பக்கத்தின் நோக்கம் 303 பேர்களையும் புண்படுத்துவது அல்ல, மாறாக இது போன்றதொரு கடற் பயணத்தை ரோலர் போன்ற தரமற்ற கடற்கலங்கள் வழி இன்னொருமுறை நம்மவர்கள் முயற்சிக்கக் கூடாது என்பதற்காக்கத் தான்.  

ஏனெனில் இதில் இறப்பை தவிர வேறு ஒன்றும் மிஞ்சுவதற்கு இல்லை.    

முகவர்களின் இலக்கு பணம் ஒன்று தான்.

கப்டன் அ. ஆதவன்

TP – 00 94 777 64 99 55 (Viber,Whatsapp)

Email - marinerathava@yahoo.com

Face book – athiroobasingam.athavan

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Uduvaiuran (Canada) Posted Date: November 14, 2022 at 08:49 
அருமையான ஓர் பதிவு!

S.Sripathy (Vvt) Posted Date: November 12, 2022 at 20:30 
Athavan you are hundred percent correct.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
முல்லைத்தீவில் அகதிகள் வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
உழவு இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மீண்டும் காங்கேசன்துறை நாகபட்டிணம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 2024>>>
SunMonTueWedThuFriSat
123
4
567
89101112
13
14
15
16
17
18
192021
222324
25
26
27
28
29
30
31    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai