யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் நேற்று (28.12.2024), தனியார் பேருந்து ஒன்று சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொளி ஒன்று பகிரப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறான சாரத்தியத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு அமைவாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.