வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், அதி தீவிர தாழமுக்கமாக மாறும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2023 (புதன்கிழமை)
நேற்றய தினம் தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கருகே தோன்றிய தாழமுக்கம் (Low pressure), மேற்கு வட மேற்குத் திசையில் நகர்ந்து இன்றைய தினம் (15) தீவிர தாழமுக்கமாக (depression) மாறும் என்று இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து வட மேற்குத்திசையில் நகரும் தீவிர தாழமுக்கம் நாளை அதி தீவிர தாழமுக்கமாக (Deep depression) மாறி, நாளை மறுதினம் (17) வடக்கு - வட கிழக்குத் திசைக்கு மாறி இந்தியாவின் ஒரிசா கரையையொட்டி நகரவுள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.