பலாலி விண்மீன் வி.கழக உதைப்பந்தாட்ட 2 ஆம் சுற்று -கம்பர்மலை யங்கமன்ஸ், உடுப்பிடி நவஜீவன் வி.கழகங்கள் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2014 (திங்கட்கிழமை)
பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் 2ஆம் சுற்று ஆட்டங்களின் வரிசையில் இன்று மாலை நடைபெற்ற முதலாவது போட்டியில் கம்பர் மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 4:1 கோல் கணக்கில் கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 4:0 கோல் கணக்கில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தும்பளை கருணையுள்ளம் விண்மீன் நற்பணி மன்றத்தின் அனுசரணையுடன் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தினால் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.