இன்னும் ஓரிரு வாரங்களில் திறக்கப்படவுள்ள இலங்கையின் முதலாவது கட்டணம் செலுத்தும் முறையிலமைந்த Colombo – Katunayake Expressway, அதிவேகம் 110 Km/h
பிரசுரிக்கபட்ட திகதி: 10/10/2013 (வியாழக்கிழமை)
இலங்கையின் தலைநகர் கொழும்பையும், பிரதான விமான நிலையமான கட்டுநாயக்காவையும் இணைக்கும் 25.8 கிலோ மீட்டர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை இன்னும் ஓரிரு வாரங்களில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்மூலம் கொழும்பிலிருந்து விமான நிலையத்தை 20 நிமிடங்களில் அடைய முடியும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
இது இலங்கையில் அமையவுள்ள முதலாவது கட்டணம் செலுத்திப் (Toll gates) பயன்படுத்தப்படும் வகையிலமையவுள்ள நெடுஞ்சாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையின் சில பற்றிய தரவுகள்.
கீழ் குறிப்பட்ட தரவுகள் பல்வேறுதரப்பட்ட அரசுசார் செய்தி அறிக்கைகளிலிருந்து எம்மால் (வல்வெட்டித்துறை.org) தொகுக்கப்பட்டவையாகும்.
நீளம்
25.8 கிலோ மீட்டர்
அகலம்
26 தொடக்கம் 33.5 மீட்டர்
கட்ட எடுத்த காலம்
சுமார் 4 வருடங்கள்
செலவு
292 மில்லியன் அமெரிக்கன் டொலர்
வேகம்
முதல் 8 கிலோ மீட்டர்களுக்கு 80 Km/h
மிகுதித் தூரத்துக்கு 110 Km/h
மாறக் கூடிய இடங்கள் (interchanges)
1) புதிய களனிப் பாலம்
2) பேலியகொட
3) ஜா எல
4) கட்டுநாயக்கா
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.