பருத்தித்துறையிலிருந்து சுமார் 600 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள புயல் 'பைலின்' (Phailin)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2013 (வெள்ளிக்கிழமை)
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது மிகக் கடும் புயலாக மாறி (Very severe cyclonic storm), வங்காள விரிகுடாவில் வடமேற்குத் திசையாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. இப்புயலுக்கு பைலின் (Phailin) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பருத்தித்துறையிலிருந்து சுமார் 600 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள புயல் பைலின் தற்பொழுது கணிப்பிட்டபடி, தொடந்தும் வடமேற்குத் திசையையாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இப்புயல் நாளை பிற்பகல் இந்தியாவின்ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு இடைப்பட்ட கரையோரப் பிரதேசங்களான 'கலிங்கபட்டினம்' மற்றும் 'பாரதீப்' ஆகிய துறைமுகங்களுக்கிடையிலான பகுதிகளைக் கடக்கவுள்ளது.
புயல் பையிலினால் இலங்கைத் தீவிற்கு நேரடிப் பாத்திப்புக்கள் ஏற்படாது விட்டாலும், இலங்கையின் பல பகுதிகளில் அசாதாராண காலநிலை தொடந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் முகில் மேகமூட்டத்துடன் (Overcast) காணப்படுகின்றது.
காற்றானது மணிக்கு 65 கடல்மைல்களுக்கு மேல் வீசும் பொழுது கடலில் ஏற்படும் மாற்றத்தை படத்தில் காணலாம். தற்பொழுது வங்காள விரிகுடாவில் புயல் பயிலினுக்கு அருகாமையில் காற்றானது மணிக்கு 65 கடல்மைல்களுக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது . படத்தில் காட்டப்பட்டுள்ள அலையானது யாழ்பாணம் வல்லிபுரக் கோவில் - கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள மணல் மேட்டின் உயரத்தை விட உயரமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
Photo from IMO Publication
புயலின் செய்மதிப்படம்
மேற்குறிப்பிட்ட புயல் சம்பந்தப்பட்ட செய்தி இந்தியா உட்பட்ட உலகின் சிறந்த வானிலை அவதான நிலையங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எம்மால் (Valvettithurai.org) தொகுக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.