சற்குணராஜா நிமலன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2024 (வியாழக்கிழமை)
யாழ் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சற்குணராஜா நிமலன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
அன்னார் மயிலிட்டி காலஞ்சென்றவராகிய திரு சிற்றம்பலம், திருமதி நாகம்மா தம்பதிகளின் அன்பு பேரனும்.
அன்னார் வல்வெட்டித்துறை காலஞ்சென்றவர்களாகிய திரு திருமதி வ. இ. ஆனந்தவேல் இராசரெத்தினம்தம்பதிகளின் அன்பு பேரனும் திரு திருமதி சற்குணராஜா வசந்தகுமாரி தம்பதிகளின் அருந்தவப்புதல்வனும்ஆகிய திரு நிமலன் அவர்களின் நினைவு அஞ்சலி.
இலைகளாய் உதிரும்
ஆண்டுகள் நடுவே இதயத் தளிராய்
எமக்குள் சிரிக்கும் இனிய நிமலனே!
தாகம் எடுக்கும் தனிப்புப்பொழுதில்
உன்னையே நினைவாய் உள்ளே
குடித்து உயிர் வாழ்கின்றோம்
உறவுகள் முழுதும் உருகி அழிந்தநாள்
பெருகிய சோகம் பெருகிப்பெருகி
உலகை உறுத்தும் உண்மை
வலியுடன் உந்தன் வலியும் ஒருங்குகூடி
எம்மை வருத்தும் இந்த நாளில்
எங்கள் நிமலனே!
இனிய புதல்வா
எத்தனை ஆண்டுகள்
இப்படிக்கடக்கினும் உந்தன்
நினைவை உங்கள் நினைவை
உரிய சுடராய் ஏந்திப்பிடிப்போம்
உம்பிரிவின் கண்ணீர்க்கடலை
நாங்கள் உரிமைக்கனவாய் நீந்திக்
கடப்போம்.
அன்பும் பாசமும் நிறைந்த அம்மா அப்பா, உறவினர்கள், நண்பர்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.