பிரேசிலின் தலைநகர் றியோ டி ஜனேறோ இல் உள்ள கிறிஸ்து சிலை மின்னல் தாக்கி சேதம், சிலையின்
பிரத்தியேக எமது படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/01/2014 (சனிக்கிழமை)
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகர் றியோ டி ஜெனீரோவில் (Rio de Janeiro) பிகோ டோ கோர்கோவடோ (Pico do Corcovado) என்னும் மலையின் உச்சியில் அமைந்துள்ள மிக பிரமாண்டமான யேசு கிறிஸ்து சிலை (Statue of Christ) மின்னல் தாக்கியதில் சேதமடைந்துளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ரியோ டி ஜெனீரோவில் நிகழ்ந்த அசாதாரண காலநிலையின் போது ஏற்பட்ட இடி மின்னலின் போது குறித்த சிலை மீது 40 ஆயிரம் மின்னல் கதிர்வீச்சுகள் பாய்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சிலையின் வலது பக்க இரு விரல்களும், தலையும் சேதமடைந்துள்ளதாகவும், இவற்றைத் திருத்தியமைக்க 4 மாதங்கள் வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
1931 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த ஜேசு கிறிஸ்து சிலை, 2010 ஆம் ஆண்டு 4 மில்லியான் அமெரிக்க $ செலவில் ஏற்கனவே திருத்தப்பட்டிருந்தது.
தலைநகர் றியோ டி ஜனேறோ பக்கத்தில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிகோ டோ கோர்கோவடோ (Pico do Corcovado) உச்சியில் 740 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த உலகப் புகழ்பெற்ற சிலையின் உயரம் 38 மீட்டர் ஆகும். சிலையானது எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் தெரியும் வண்ணம் வடிவமைக்கப்ப்ட்டுள்ளது.
கடந்த 2007–ம் ஆண்டு நடந்த ஓட்டெடுப்பின் பொழுது 7 புதிய உலக அதிசயங்களில் இதுவும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டடிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
கீழே இணைக்கப்பட்டுள்ள யேசு கிறிஸ்துவின் சிலை (Statue of Christ) 3 திசைகளில் இருந்து 3 வாரங்கள் எம்மால் (வல்வெட்டிதுறை.org) படமாக்கப்பட்டவையாகும். (சிலை திருத்தப்படும் படங்கள் தவிர்ந்த)
3 வாரங்கள் முன்பு சிலையின் தோற்றம், பல கோணங்களிலிருந்து எடுக்கப்பட்டவை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.