குறித்த காணொளி வல்வெட்டிதுறையின் மயிலியதனைப் பகுதியில் வைத்து காட்சியாக்கப்பட்டது. படத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்டுள்ளது கடற்கரைப் பிரதேசத்துக்கே உரித்தான அழகான தென்னை மரங்கள். அடுத்து தெரிவது காங்கேசந்துறைக் கடல். அதனைத் தொடர்ந்து கடலில் தெரிவது பருத்தித்துறைப் பக்கமாகச் செல்லும் எல்லோராலும் அறியப்பட்ட டோரா - இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட அதிவேக விசைப்படகு.
அடுத்து இயற்கையாக அமையப்பெற்ற முருகைக்கற்கள், கடல் அரிப்பைத் தடுக்க வல்லவை. அடுத்து கடலுக்குள் நீண்டு தெரியும் மரங்கள் திக்கம் முனைப்பகுதியாகும். தொடர்ந்து தென்னை மரங்கள், முன்னர் அமையப்பெற்றிருந்த கடலைக் கண்காணிக்கும் சிறிய பாதுகாப்பு அரண், அண்மையில் காலமாகியிருந்த அன்னை முத்துமாரியம்மன் டிரவல்ஸ் உரிமையாளர் திரு.ராசாவின் வீடு, மற்றும் போர் காலங்களில் தரைமட்டமாகியுள்ள வீடுகள் என்பவையாகும்.
இவ்வாறான கடற்கரையோர வீடுகள் வெளிநாடுகளில் ஏன் மும்பாயின் ”யூகு பீச்” போன்ற இடங்களில் பல கோடிகளைத் தாண்டும்.
வல்வெட்டிதுறைக் கடலை நாம் பொதுவாக பாக்கு நீரிணையின் ஒரு பகுதி எனக் கூறி வந்தாலும், இவை வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியேயாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.