250 வருடங்களின் பின்னர் மோசமான காலநிலை, லண்டன் தேம்ஸ் நதி நிரம்பி புறநகர் பகுதிகளில் பெரும் வெள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2014 (புதன்கிழமை)
பிரித்தானியாவில் பெய்து வரும் தொடர்ச்சியான மழையினால், லண்டனின் புற நகர்ப்பகுதிகள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு வாரத்திற்கு மழை பெய்யலாம் என வெள்ள அபாய எச்சரிக்கை 14 இடங்களில் போடப்பட்டுள்ளது.
இதனால் மேலும் பல ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 1600 இராணுவ வீரர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் அவசர உதவி வேலைகளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலும் பல இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், எதிர்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட் என பலரும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களுக்கு அறுதல் கூறியுள்ளனர்.
250 வருடங்களின் பின்னர் இப்படி ஒரு மோசமான காலநிலை ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.