1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு, வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தை 02 Aug 13 அன்று சென்றடைந்திருந்த, Florence C Robinson எனும் பாய்மரக் கப்பலான அன்னபூரணியை, அப்படியே ஒத்த மாதிரிக் கப்பலை (Model ship) வல்வெட்டித்துறையில் வடிவமைப்பதற்கு நாம் முயற்சி எடுத்துள்ளோம்.
எமது இணையதளமான Valvettithurai.org யினால், அ.சி.விஸ்ணுசுந்தரம் நினைவு மையத்தின் அனுசரணையுடன், வல்வெட்டித்துறை மேத்திரிகளால் உருவாக்கப்படவுள்ள அன்னபூரணி மாதிரிக் கப்பலை (Model ship) வடிவமைக்கும் ஆரம்ப நிகழ்வு, கடந்த 15 June 13 அன்று வல்வெட்டித்துறையில் பூச்சி குத்தானில் நடைபெற்றது.
சுமார் 5 x 1.5 x 3.5 என்ற அளவில் செய்யப்படவுள்ள இந்த மாதிரிக் கப்பல், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி கொள்கலன் கப்பலைப் போல் கண்ணாடியால் மூடப்படவுள்ள இக்கப்பலைச் செய்வதற்கு சுமார் 2 மாதங்கள் எடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்பொழுது வல்வையில் உள்ள, கப்பல் கட்டும் தொழிலுடன் தொடர்புடைய அனேகமாக அனைத்து மேஸ்திரியார்களும் இதன் உருவாக்கத்தில் பங்குகொள்ளவுள்ளார்கள்.
இவ் மாதிரிக் கப்பலை, இதன் உருவாக்கத்தின் பின்னர், ஒரு சிறு விழாவினூடாக வல்வெட்டித்துறை சந்தியில் உள்ள வல்வை பொது சன சமூக சேவா நிலையத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.
தேரந்தெடுக்கப்பட்ட மாதிரி அளவுகள்
சம்பிரதாயமான பூஜைகள்
ஆரம்ப வரைபடங்கள்
மாதிரிக் கப்பலை வடிவமைக்கவுள்ள எல்லா மேஸ்திரிமார்கள்
வலமிருந்து இடமாக நாராயிணி மேஸ்திரி (2 ஆவது), பழனி மேஸ்திரி (3 ஆவது) கட்டி மேஸ்திரி (4 ஆவது), சாமி மேஸ்திரி (5 ஆவது)
A model ship of a Container ship m.v.Hanjin Turkey delivered on January 30th 2013
இது அன்னபூரணியின் புகழையும், வல்வெட்டித்துறையில் அழிந்து வரும் கப்பல் கட்டுமானத்தையும் சிறிதளவு நிலை நிறுத்தும் எமது இணையதளத்தின் ஒரு முயற்சியாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.