கடந்த 5 ஆம் திகதி வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் தூபி ஒன்று அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும் வல்வெட்டித்துறை போலீசார் பருத்தித்துறை நீதிமன்றில் பெற்ற தடை உத்தரவு காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
குறித்த வழக்கு கடந்த 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வல்வெட்டித்துறை நகரசபையின் பிரேரணையின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு ஒன்றிற்கமைய தூபி அமைப்பதில் தவறு எதுவும் இல்லையென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதேவளை கடந்த 5 ஆன் திகதி தூபி அமைக்க முற்படுகையில் பொதுமக்களும் குமரப்பா, புலேந்திரன் ஞாபகார்த்த தூபி தவிர்ந்த தூபி எதுவும் அமைக்கப்படக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.