வல்வெட்டித்துறை நெற்கொழு வீதியில் இரண்டு (2.0) பரப்பு வெற்றுக்காணி விற்பனைக்குண்டு. வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து 1.7 கி.மீ. தூரத்தில், அழகான பசுமை நிறைந்த சூழலில் அமைந்த வசிப்பிடக் காணி. மின்சார வசதி காணிவரையிலுண்டு.
காணியின் அருகாமையில் தற்சமயம் உள்ள 10 அடி அகலமான பாதை நகரசபையினால் 15 அடியளவில் விஸ்தரிக்கப்படவுள்ளதாக அறியக்கிடக்கின்றது. இதிலிருந்து பிரியும் 12 அடி அகலமான ஒழுங்கையில் இரண்டாவது காணியாக 55 அடி அகலமான முகப்பு எல்லையைக் கொண்டது. இரு பக்கங்களில் சுற்று மதில் உண்டு.
தெளிவான, பிரச்சனையேதுமற்ற, நூறு வருடங்களுக்கும் மேலான உறுதியுண்டு. அண்மையில் பெற்றுக்கொண்ட நில அளவைப் படமுமுண்டு’.
கூகுள் வரைபடத்தின் ஆள்கூறுகள் 9.820162 N, 80.156885 E
மொத்த விலை: ரூ. 8,000,000/= (ரூபா எண்பது இலட்சம்) அல்லது அதியுயர் கோரல் விலை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.