வல்வெட்டித்துறை வாவினி வீதியைச் சேர்ந்த (ஊரணி) திரு. சந்திரதாஸ் அரவிந்தன், சட்டத்தரணியாக இலங்கையின் உச்சநீதிமன்றில் கடந்த 24/11/2026 அன்று சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.
தற்போது பருத்தித்துறை நீதிமன்றத்தில் பணியாற்றும் இவர், தனது சட்டக்கல்விக்கான பட்டப்படிப்பை இலங்கை திறந்தபல்கலைகழகத்தில் LL.B (Hon) பூர்த்தி செய்து அதன்பின் இலங்கை சட்டக்கல்லூரியில் Attorney at Law இனை நிறைவு செய்துள்ளார்.
சட்டப்படிப்பை விட, கிழக்கு பல்கலைக்கழகத்தில் Bsc. Accountancy and Financial Management (Hons) மற்றும் Masters in Development Economics கற்கைகளையும், Post Graduate Diploma in Development Studies and Public Policy இனை இலங்கை திறந்த பல்கலைகழகதிலும், Higher National Diploma in Accountancy (HNDA) மற்றும் Association of Accounting Technician, Sri Lanka (MAAT) என்பனவற்றையும் பூர்த்தி செய்துள்ளார்.
கடந்த 20 வருடங்களாக பல சர்வதேச மற்றும் உள்ளூர் NGO களில் பணிபுரிந்துள்ளார். அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திலும், Sri Lanka Institute of Advanced Education (SLIATE) லும் Visiting Lecturer ஆக பணிபுரிந்துள்ளார்.
மேலும் இலங்கை திறந்தபல்கலைகழகத்தின் யாழ்ப்பான நிலையத்தில் சட்டக்கல்விக்கான பட்டப்படிப்பை (LL.B) மேற்கொள்ளும் 3 ஆம் வருட மாணவர்களுக்கு பகுதி நேர விரிவுரையை வழங்குகின்றார்.
வல்வை மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர், வல்வை ஊரணி நலன்புரிச் சங்கத்தின் செயலாளராகவுள்ள இவர், வெடாவின் வளர்ச்சிக்கு 10 வருடங்கள் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.