ஈழத்தின் பிரபல ஓவியர் மற்றும் சிற்பி திரு.ரமணி சிவசுப்பிரமணியம் இன்று காலமானார். இவர் வல்வை தீருவிலில் 1988 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி அன்று திரைநீக்கம் செய்து வைக்கப்பட்ட போராளிகள் சிலையை வடிமைத்தவர் ஆவார்.
குறித்த சிலைகளின் தொகுதி இன்றும் இடிபாடுகளுடன் குறித்த இடத்திலேயே உள்ளன.
அத்துடன் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட மில்லர் சிலை, ஆறுமுக நாவலர் பெருமானின் உருவச்சிலை (யாழ் இந்துக்கல்லூரி), தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைக்கப்பட்ட அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் உருவச்சிலை, சேர்.பொன்.இராமநாதன் உருவச்சிலை , கந்தையா உபாத்தியாயர் சிலை, டாக்டர் சுப்பிரமணியம் மற்றும் பல பெரியார்களின் உருவச்சிலைகள் என ஈழத்தில் பல உருவச்சிலைகளை உருவாக்கிய பெருமைக்குரிய கலைஞர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.