ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
“தடி எடுத்தவன் எல்லாம் சண்டை காரன் ஆவான்” என்பது போல் ஆகிவிட்டது யாழில் Youtube காரர் தொல்லை. யாழ்பாணத்து You tube காரர்களை பற்றி பதிவிட வேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனாலும் இருந்து விட்டு போகட்டுமே என்று விட்டு விடுவதுண்டு.
கடந்த சில வருடங்கள் முன்பு கடற்Xலிகள், இயக்Xம் பற்றி ஒருவர் ஒரு காணொளி பதிவேற்றியிருந்தார்.
அக்காணொளியின் பகுதிகள் அனைத்துமே கடற்Xலிகள, இயக்Xம் பற்றிய முற்றிலும் தவறான தகவல்களை கொண்டிருந்தது. ஆனாலும் குறித்த காணொளி புதிய தலைமுறையினர் மற்றும் புலம் பெயர் மக்கள் நம்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அக்காணொளியில், “தலைவர்” கப்பல் பயிற்சிக்காக பலரை அயல்நாட்டில் உள்ள கடலியல் கல்லூரி ஒன்றுக்கு அனுப்பியிருந்தார் என்றிருந்தது.
குறித்த கல்லூரியில் தான் நானும் மற்றவர்களும் கடலியல் படித்தோம் - குறிப்பாக சிங்களவர்கள் உட்பட.
காணொளியில் கூறப்பட்ட மாதிரி இயக்Xத்தை சேர்ந்த எவருமே அப்படி அங்கு படித்திருக்கவில்லை.
இது என்னையும் சக மாலுமிகளையும் பாதிக்கக்கூடியது ஒன்று.
“இது போன்ற காணொளிகள் கண்டிப்பாக நிறைய போடுங்கள் அண்ணா” என்று குறித்த காணொளிக்கு Comment கள் வேற.
இதற்கு எதிராக நான் பதிவிட்ட Comment ஒன்றின் பின்னர் குறித்த காணொளி காணாமல் போய்விட்டது.
இது ஒரு உதாரணம் தான்.
இது போல் யாழ் You tube காரர் களின் பெரும்பாலான காணொளிகள் – போலியானவை, தவறான கருத்துக்கள் கொண்டவை, எழுந்தமான ரீதியில் அமைந்தவை, தேசியத்தை தவறான நேரத்தில் தவறாக பயன்படுத்துவை, Journalist, Media க்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் எதுவும் அற்றவை....... என நீட்டிக் கொண்டு போகலாம்.
அர்ச்சுனாவிக்கு தோளில் வில் தூக்கி வைத்த பெருமையும் இவர்களையே சாரும்
தமிழகத்து, குறிப்பாக கிராமப்புற, You Tube காரர்களின் தரத்தை இவர்களுடன் ஒப்பிடமுடியாது.
நான் கப்பல் புறப்பட முன்னர் ஏராளமான தமிழ் You tube தரவிறக்கம் செய்து கொண்டு செல்வது வழக்கம், அவை அனைத்துள் தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டவை தான் – காரணம் தராதரம் அப்படி.
விடயத்துக்கு வருகின்றேன்.
நேற்று மாலை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடயம் சம்பந்தமான ஒரு Youtube காணொளி பதிவிடப்பட்டுள்ளது.
காணொளியில் குறித்த நபர், பார்ப்பவர்கள் இரக்கப்படக் கூடிய வகையில் - சிவாஜி அண்ணா குடும்பத்துக்கு உதவுவது போல் - மிகவும் நூதனமாக - View கள் பெறக்கூடிய வகையில் வியூகம் அமைத்து தனது காணொளியை பதிவிட்டுள்ளார்.
திருமதி சிவாஜிலிங்கத்தின் வங்கி விபரங்கள், தொடர்பு இலக்கத்தையும் அதில் அவரின் அனுமதியின்றி இணைத்துள்ளார். இது சட்டத்துக்கு புறம்பானது.
இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டவன் நான் தான். சிவாஜி அண்ணா குடும்பம் நீங்கலாக.
நேற்று நண்பகல் சிவாஜி அண்ணாவை பார்க்க சென்ற எனது மனைவி தான்,(திருமதி சிவாஜிலிங்கத்தை வங்கிக்கு அழைத்து சென்று) குறித்த வங்கி கணக்கு விபரத்தை பெற்ற ஒரே ஒரு நபர் ஆவார் . எனது வேண்டுதலின் பேரில்.
ஒரு சில வல்வைவாசிகள் உதவ முன்வந்த காரணத்தால், தனிப்பட்ட முயற்சியாக Whatsapp குழுமம் ஒன்றில் பகிர்வதற்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறு உதவி .
குறித்த நபர், சிவாஜி அண்ணா குடும்பத்துடன் ஒரு அனுதாபி போல் கதைத்து, வைத்தியசாலையின் அனுமதியின்றி (திருட்டுத்தானமாக) காணொளி எடுத்து, வங்கி கணக்கு விபரங்களை Whatsapp ஊடாக பெற்று 'குடும்பம் உதவி கோரல்' என்று தான் தோன்றித்தனமாக தனது காணொளியில் பதிவிட்டுள்ளார்.
இது சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் போன்றவர்களுக்கு உள்ள பெரிய பலமே – மூலதனமே புலம் பெயர் மக்கள் தான். ஏன் என்றால் இவர் போன்றவர்களின் காணொளிகளை தாயகம், தேசியம் என்று கோணத்தில் கண்மூடித்தனமாக ஆதரிப்பது.
இவ்வாறு பெரும்பாலான So called யாழ் You tube காரர்கள் பாதிக்கப்படுவது தரமான சில யாழ் You tube காரர்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.