ஆதவன் பக்கம் (33) – இவர்கள்தான் கெளரவிக்கப்படவேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)
நம்மவர்களுக்கு ஒரு பழக்கம். ஒன்று மற்றவரை கொப்பியடிப்பது அல்லது செய்ததையே திருப்பித்திருப்பிச் செய்வது. ‘மாத்தியோசி’க்கும் வழக்கம் குறைவு.
அண்மைய டிரென்ட் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து கெளரவிப்பு. தரம் ஐந்து புலமைப்பரிசில் சித்திபெற்ற மாணவர், க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பரீட்சை, போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் என பல இடங்களில் பல விழாக்களின் போது பரீட்சைகளில் சித்திபெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்படுகின்றார்கள். இதில் குறைகூற ஒன்றுமில்லை.
இது எந்தளவுக்கு பரிசில் பெறும் குறித்த மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றது என்றும் ஏனைய மாணவர்கள் மீது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றும் சரியாகத் தெரியவில்லை.
ஆனாலும் குறித்த பரீட்சைகளில் சித்திபெறும் மாணவர்களை ‘கல்விச் சாதனையாளர்கள்’ என்றுகூறி, நியத்தில் சாதனைகள் ஏற்படுத்தும் ‘சாதனையாளர்’ களின் பெயரை பிரயோகிப்பது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று, மற்றவர் ஏளனம் செய்வதற்கு இடம் கொடுக்கக்கூடாது.
எனது மகள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்றபோதும், பல சான்றிதழ் வழங்கும் வைபவங்களுக்கு அழைத்திருந்தார்கள். வழங்கியவர்கள் வங்கிகள், அரசியல் பிரமுகர்கள். என்ன காரணம் என்றுகூற வேண்டிய அவசியமல்ல. மகளுக்கும் கடைசியில் அலுத்துவிட்டது, கூட்டிக் கொண்டு போய் வந்ததில் எங்களுக்கும் அலுத்துவிட்டது.
(குறிப்பு – பண மழை, பரிசில் மழை எல்லாம் GDP குறைந்த ஊர்ப்பக்கங்களில் தான், GDP கூடிய தலைநகரில் சான்றிதழ் மட்டும் தான்).
சில மாதங்கள் முன்பு நண்பன் மாணிக்கலிங்கம் வரதன் Facebook இல் ஒரு பதிவை இட்டிருந்தான்.
குறித்த பதிவில் சில பந்திகளை நீக்கிவிட்டு ஏனையவற்றை அப்படியே கீழே இணைத்துள்ளேன்.
அண்மையில் ‘இலங்கையின் தற்போதைய அரசியல் நிலமையும் தமிழர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கு பேசப்பட்ட பல முக்கிய விஷயங்களில் ஒன்று இன்று உங்கள் சிந்தனைக்காக...
பின்வரும் விடயம் இலங்கையில் இறுதியாக 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற சனத்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. முடிந்தவரை சுருக்கமாக தர முயற்சிக்கிறேன். முக்கியம் கருதி தொடர்ந்து வாசிக்கவும்.
வடமாகாணத்தில் வாழும் மக்களில் அண்ணளவாக 10 இலட்சம் தமிழர்கள். (99%). ஒப்பீட்டளவில் பலமான நிலை.
கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 15 இலட்சம். இதில் தமிழ் மக்களின் தொகை அண்ணளவாக 6 இலட்சம் பேர். கிழக்கு மாகாண சனத்தொகையில் பாதியளவு கூட இது இல்லை. அதிலும் குறைவு. இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் விகிதாசாரம் என்பது 75% ற்கும் அதிகமாக இருந்தது.
(பந்தி அகற்றப்பட்டுள்ளது)
வடக்கு கிழக்குற்கு வெளியே தென்பகுதியில் வாழும் தமிழர்களது எண்ணிக்கை அண்ணளவாக 15 இலட்சம்பேர். இலங்கை தீவு முழுவதிலும் வாழும் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை (இலங்கைத் தமிழர் + இந்திய வம்சாவழித் தமிழர்) அண்ணளவாக 31 இலட்சம் பேர்.
இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் இருப்பு இலங்கைத் தீவில் தொடர்ந்தும் பலமாக இருக்க வேண்டுமானால் வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதே ஒரே வழி. இதற்கான பேரம் பேசலுக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர் சனத்தொகை மொத்த சனத்தொகையில் பாதியளவு தன்னும் இருக்க வேண்டும். அதாவது அண்ணளவாக குறைந்தது 2 இலட்சம் பேரால் அதிகரிக்க வேண்டும். இதே வேளை அங்குள்ள ஏனைய மக்களின் சனத்தொகையும் அதிகரிக்கும் என்பதை கருத்திற் கொள்க....
குறிப்பாக கிழக்கு மாகாண எமது சொந்தங்கள் , தமிழர்களாக நாம் அனைவரும் இனியாவது இந்தநிலை மேலும் மோசமடையாது எமது இருப்பை தக்கவைக்க என்ன செய்யப் போகிறோம்?
(பந்தி நீக்கப்பட்டுள்ளது)
குறிப்பு: யுத்தம் ஆரம்பிக்க முன்பாக படிக்கும் போது இலங்கையின் தமிழர் சனத்தொகை (80களின் ஆரம்பத்தில்) 35 இலட்சம் எனப் படித்ததாக ஞாபகம். அதன் பின்னர் 35 வருடங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையில் தமிழரது சனத்தொகை மட்டும் கூடவில்லை. மாறாக குறைந்துள்ளது. ஆனால், ஏனைய இனங்களின் சனத்தொகையோ........!!!!!!
இனியாவது சிந்திப்போமா உறவுகளே!
இதுதான் நண்பனின் பதிவு.
ஊரில் கெளரவிக்கப்படவேண்டியவர்கள் பல துறைகளைச் சேர்ந்தவர்கள், சேராதவர்கள் என பலர் உள்ளார்கள். அவற்றில் இரண்டை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன்.
1)ஊரில் அதிக பிள்ளைகள் பெற்றவர்களை ஒருமுறையாவது கெளரவியுங்கள். அறிந்தோ அறியாமலோ தமிழர்கள் இருப்பிற்கு பலம் சேர்க்கும் இவர்கள் போன்றவர்கள் ஒருமுறையாவது மேடை ஏற்றப்படவேண்டியவர்கள்.
அம்மாச்சி அப்பா - 10 பிள்ளைகள் பெற்ற
எனது பாட்டனும் பாட்டியும்
2)குடும்பத்தில் சகல பிள்ளைகளுக்கும் தூய தமிழ் பெயர்கள் சூட்டியுள்ள பெற்றோர்களைக்
கெளரவியுங்கள்.
நாம் பலரை கெளரவிக்கத் தவறியிருக்கின்றோம். அவர்களில் சிலர் அன்றும் இன்றும் அம்மன் கோயில் திருவிழாக் காலங்களில், திருவிழா நிகழ்வுகளில் ஈடுபடாது பல வருடங்களாக தாக சாந்தி அளித்து வந்த இரண்டு பெண்மணிகள். பிறந்ததிலிருந்து நாற்பது வருடங்களுக்கு மேலாக எங்களுக்கு உருக் கொடுத்துக் கொண்டிருக்கும் பறை வாத்தியக் கலைஞன் குமாரையும் கெளரவிற்க தவறியுள்ளோம்.
அண்மையில் வல்வை மாலுமிகள் சங்கம் வல்வையின் ஆவணக் காப்பாளரான திரு. நகுலசிகாமணி அவர்களை கெளரவித்திருந்தது. வித்தியாசமான கோணத்தில் வேறும் மூவரை கெளரவம் செய்ய முயற்சித்தார்கள். ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துவிட்டார்கள். இந்த விடயத்தில் மாலுமிகள் சங்கத்துக்கு ஒரு சலாம் போடலாம். ஆனாலும் திருமதி உமா நகுலசிகாமணிக்கும் கெளரவம் செய்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
வித்தியாசமாக கெளரவியுங்கள். அது எமது இனத்துக்கும், மொழிக்கும் நீங்கள் செய்யும் பெரியொதொரு கடமையாக அமைந்துவிடும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Yogaguru anandamyle (Now in. Uk)
Posted Date: August 27, 2018 at 17:31
Very nice comments athavan. Keep up your good work.also like the comments about the inthira Vizha.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: August 26, 2018 at 20:47
உண்மைதான் கெளரவிக்கபடவேண்டியவர்கள் பணம் படைத்தவர்களோ பதவியில் இருப்பவர்களோ வயதில் மூத்தவர்களோ அல்ல எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருப்பவர்களும் தூரநோக்கத்துடன் செயலார்ருபவர்களும் தமிழ்மொழியையும் தமிழர் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் ஊரின் ஒற்றுமைக்கு உழைப்பவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் வயது வேறுபாடு இன்றி கெளரவிக்கபடவேண்டியவர்களே ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.