கரவெட்டி பிரதேச சபையில் பம்பஸ் பாவணையாளர் தகவல் சேகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2025 (திங்கட்கிழமை)
கரவெட்டிப் பிரதேச சபைக்குட்பட்ட பம்பஸ் (Baby napkin) பாவனையாளர்களுக்கான தகவல் சேகரிப்புப் படிவம் வழங்கப்படவுள்ளது.
பயன்படுத்தப்பட்ட பம்பஸ்களை உரியவாறு அகற்றுவதற்கான வசதியின்மையால் பம்பஸ் பயன்பாட்டாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
எனவே இவற்றை வடமராட்சி தெற்கு மேற்கு பிர தேசசபையினால் சிறு கட்டணம் பெற்று சேகரித்து உரியவாறு பரிகரிப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது, எமது ஆளுகைப் பிரதேசத்திலுள்ள பம்பஸ் பாவனையாளர்களின் தகவல்கள் இல்லாதிருப்பதனால் செயற்படு திட்டம் ஒன்றைத் தயாரிப்பது சிரமமாக உள்ளது.
எனவே தங்களினால் வழங்கப்படுகின்ற தகவல்களைக் கொண்டு நேர்த்தியான திட்டம் ஒன்றினைத் தயாரிக்கவுள்ளோம். வீதிகளில் வீசப்படுகின்ற பம்பஸ்களை இல்லாது ஒழிப்பதற்கு (பூச்சிய நிலை) பொது மக்களாகிய உங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தங்களின் பரிபூரணமான ஒத்துழைப்புக்களை வேண்டிநிற்கின்றோம்.
தங்களிடமிருந்து தகவல்களை 2025.04.10ம் திகதிக்கு முன்னராக கணிசமான அளவு தகவல்கள் கிடைக்கப்பெறுமிடத்து எமது திட்டங்களை தயாரித்து 2025.04.15ம் திகதியிலிருந்து இத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்பதனை தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.
முக்கிய குறிப்பு : ஒவ்வொரு பயனாளருக்கும் ஒவ்வொரு தனிப்படிவம் பூரணப்படுத்த வேண்டும் என கரவெட்டி பிரதேச சபை அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.