"ஆனந்தி அக்கா" என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம், தமிழ் ஒலிபரப்பில் ஒரு முன்னோடி நபராக இருந்தார். பிபிசி தமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசையின் மூத்த அறிவிப்பாளர் ஆனார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் இலங்கை வானொலியில், தயாரிப்பாளராக பணிபுரிந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில் நடித்ததுடன் அறிவிப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.
அதன்பின்னர் 1970 களில் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த அவர் பிபிசி தமிழோசையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிரந்தர அறிவிப்பாளராக மூத்த தயாரிப்பாளராகவும் பணியாற்றி 2005 இல் ஓய்வு பெற்றார்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவர்களை முதன் முதலில் பேட்டி கண்டவர் இவரே ஆவார். பேட்டியின் பின்னர் பிரபாகரன் அவர்கள் ஒரு அதிசயப் பிறவி எனக் குறிப்பிட்டிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.