சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2026 (வெள்ளிக்கிழமை)
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு நேற்றய தினம் காலை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், வரவேற்புரையினை ஆசிரியர் திருமதி கஜந்தா தனாளனும், சிறப்புரையை ஆசிரியர் திரு சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர்.
மாணவர்களின் கலை நிகழ்வுகளான பேச்சு, கவிதை வாசிப்பு, பாடல், நடனம் ஆகியன இடம்பெற்றன.
தொடர்ந்து ஆசிரியர் திரு க. லக்மிகாந் நன்றியுரையை நிகழ்த்தினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.