20ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் 23/07/2014 புதன்கிழமை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பிரித்தானியர்களின் பேரரசுகள் என ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டி, முதன் முதலாக 1930 ஆம் வருடம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டியைப் போலவே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டி கடந்த முறை 2010 ஆம் வருடம் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் பிரித்தானிய நாடுகளான இங்கிலாந்து,ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் அயர்லாந்து உட்பட பிரித்தானிய காலனித்துவ நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மலேசியா, கனடா, அவுஸ்திரேலியா என இந்த விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கு கொள்கின்றன.
இன்றைய நாள் வரை நடைபெற்ற போட்டிகளில் அதிகப்படியான பதக்கங்களுடன் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. அடுத்து அவுஸ்திரேலியா, கனடா, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, 5 ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இலங்கை 25 ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு.சதீஸ் சிவலிங்கம் என்பவர் பாரம் தூக்கும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இவரின் இந்த சாதனையைப் பாராட்டி, தமிழக முதல்வர்.செல்வி ஜெயலலிதா அவர்கள் இவருக்கு 50 இலட்ச ரூபாய் பணத்தை அன்பளிப்பாக வழங்கியும் உள்ளார்.
பாரம் தூக்கும் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த தமிழக வீரர் திரு.சதீஸ் சிவலிங்கம்
தங்கப்பதக்கம் பெற்ற மகிழ்ச்சியில் சதீஸ் சிவலிங்கம்
ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி கடந்த27/07/2014 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Mike Shelley என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். வழக்கமாக இந்த மரதன் ஓட்டப் போட்டியில் ஆபிரிக்க இனத்தவர்கள் தான் (kenya) முதல் இடத்தை பிடிப்பார்கள். இம்முறை 20 வருடங்களின் பின் ஒரு வெள்ளை இனத்தவர் மரதன் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
மரதன் ஓட்டப் போட்டியில் முதலாவதாக வந்த மைக் ஷெல்லி
இன்னும் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் எந்த நாடு மேலும் அதிக தங்கம் வெல்லும் என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
2018 ஆம் வருடத்தில் நடக்கவிருக்கும் 21 ஆவது போட்டிகள் அவுஸ்திரேலியா, குயீன்ஸ்லாந்தின்
கோல்ட் கோஸ்ட் (கோல்ட் Coast) என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இது அவுஸ்திரேலியாவில் நடைபெறப்போகும் ஐந்தாவது போட்டியாகும்.
ஏற்கனவே நான்கு முறைகள் அவுஸ்திரேலியாவில் போட்டிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2018ல் போட்டிகள் நடைபெறப்போகும் அவுஸ்திரேலியா, குயீன்ஸ்லாந்தின் Gold Coast
இந்தப் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 03/08/2014 ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.