இன்றைய தினம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட தொண்டமனாறு வீரகத்தி தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களிற்கு முறையான திண்மக் கழிவகற்றல் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது முறையான மற்றும் முறையற்ற திண்மக்கழிவகற்றல் செயற்றிட்டத்தினால் ஏற்படும் சாதகமான மற்றும் பாதகமான விளைவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் பாடசாலை சுகாதார கழகத்தின் மூலம் பாடசாலையில் இருந்து உருவாகின்ற கழிவுகளை தரம்பிரித்து சேகரிக்கப்பட்டு இறுதியகற்றல் பொறிமுறையை உரிய முறைப்படி நிறைவேற்றுவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் வேறுபட்ட திண்மக்கழிவுகளுக்கான நிறக்குறியீடுகளை பயன்படுத்தி தரம்பிரித்து கழிவுகளை அகற்றுதலும் அதனுடன் தொடர்புடைய 3R (Reduce- குறைத்தல், Reuse - மறுபயன்பாடு, Recycle - மறுசுழற்சி) பொறிமுறையை அமுல்படுத்தலும் இதனுடைய பிரதான நோக்கம் ஆகும்.
சர்வதேச பூச்சிய கழிவு தினம் (international zero waste day) மார்ச் 30 ஆம் திகதி உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.