இன்றைய நாளில் வல்வையில் – நான்கு நாள் குண்டுவீச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2025 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வல்வெட்டித்துறை பகுதியில் மிக மோசமான ஆகாய குண்டு வீச்சுத் தாக்குதல் இலங்கை விமானப் படையால் ஆரம்பிக்கப்பட்டது. பெயர் குறிப்பிடப்படாத இடம்பெற்ற இந்த நடவைக்கையி, குண்டு வீச்சானது, வானிலிருந்து பொது மக்களை வல்வை நகரப் பகுதியை விட்டு வெளியேறுமாறு துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு ஓரிரு மணி நேரங்களில் ஆரம்பிக்கப்பட்டது. குண்டு வீச்சு தொடர்ச்சியாக 4 தினங்கள் இடம்பெற்றது.
இக்காலப் பகுதியில் யாழ் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அன்று குண்டு வீச்சை உறுதிப் படுத்திய அரசு, விடுதலைப் புலிகளின் இனங்கானபப்ட்ட இலக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பல புலிகள் கொல்லப்பட்டனர் என செய்தியும் வெளியிட்டிருந்தது.
காலை சுமார் 0830 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குண்டு வீச்சில் முதலில் அம்மன் கோவில், சிவன் கோயில், ஆதிகோவிலின் கிழக்குப் பகுதி மற்றும் வாடி ஒழுங்கை ஆகிய பகுதிகளே இலக்கு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேம்படியும் பின்னர் பரவலாக வல்வையின் நகரப் பகுதி இலக்கானது.
முதல் குண்டு வீச்சில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் காயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வாடி ஒழுங்கை மற்றும் ஆதிகோவில் அம்மன் கோவில் மற்றும் வேம்படியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இக்குண்டு வீச்சில் பொது மக்கள் உடமைகள், பாடசாலைகள், கோயில்கள் என பலதும் பலத்த சேதத்திற்கு ஆளாகியிருந்தது. படத்தில் அம்மன் கோவிலடிப்பகுதியில் வீடு ஒன்று வானிலிருந்து வீசப்பட்ட 300 கிலோ எடையுடைய குண்டினால் சேதமடைந்துள்ளதைக் காணலாம்.
4 நாள் குண்டு வீச்சின் முடிவில், பருத்தித்துறை – தொண்டைமானாறு பிரதான வீதியிலும், ஒழுங்கைகளிலும் ஏராளமான கட்டட இடிபொருட்கள் சிதறிக் கிடந்தன. இக்காட்சியை வடமராட்சியின் பல பாகங்களிலும் இருந்து வந்து பொது மக்கள் பார்வையிட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.