இந்திர விழாவில் - உரிமை இழந்தோம் உணர்வை இழந்தோம் உரிமை இழக்கலாமா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2023 (திங்கட்கிழமை)
கடந்த சனிக்கிழமை வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளன்று 'இந்திராவிழா' மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வுகளின் வரிசையில் இசைக் குழுவினரால் பாடப்பட்ட 'ஊமை விழிகள்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா.......உரிமை இழந்தோம் உணர்வை இழந்தோம் உரிமை இழக்கலாமா' என்னும் பாடல் அங்கு நின்ற பார்வையாளர்களை சற்று வேறுபட்ட கோணத்தில் கவர்ந்திருந்தது.
குறித்த பாடல் இசைக்கப்பட்ட போது, அங்கு நின்ற பலரும் எழுந்து நின்று தமது கைப்பேசிகளின் வெளிச்சத்தை காட்டி அசைத்த வண்ணம் பாடகரோடு சேர்ந்து அப்பாடலை பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Thurailingam (UK)
Posted Date: May 09, 2023 at 09:53
இந்தப் புகைப்படத்தைப் பார்க்கவே மெய்சிலிர்க்கின்றது. இதே மனநிலை ஒவ்வொரு துறையிலும் உருவாகினால் நிச்சயம் இழந்ததெல்;லாம் பெறலாம்! மேலும் மேம்படலாம்!!
Nithushan (Sri Lanka)
Posted Date: May 09, 2023 at 02:11
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.