வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் முறையான திண்மக்கழிவு சேகரிப்பு திட்டத்தினை கண்காணிப்பதற்கு ஏதுவாக திண்மக் கழிவகற்றல் பதிவு அட்டை முறைமையொன்று முதற் கட்டமாக J/388 கிராம சேவையாளர் பிரிவில் 17.03.2025 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச்செயற்பாடானது திண்மக் கழிவுகளின் உருவாக்கம், சேகரிப்பு, எடுத்து செல்லல், இடைப்பட்ட பரிகரிப்பு, சுற்றாடலுடன் நட்புறவான இறுதிக்கழிவகற்றல் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய விரைவான முகாமைத்துவத்திற்கு சிறந்த வகிபாகம் ஆகும்.
இதனூடாக முறையான திண்மக் கழிவகற்றல் நடைபெறுவதனை உறுதிப்படுத்துவதன் மூலமும் முறையற்ற திண்மக்கழிவகற்றலினை மேற்கொள்பவர்கள் அடையாளம் காணப்படுவதனூடாக அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் இச்செயற்பாடு உந்து சக்தியாக அமையும்.
மேலும் வழமையான திண்மக்கழிவகற்றல் நேர அட்டவணையின் கீழ் திண்மக்கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள், பிளாஸ்ரிக்கழிவுகள், பொலித்தீன் கழிவுகள், கண்ணாடிகள், உலோகக் கழிவுகள், இலத்திரனியல் கழிவுகள் மற்றும் சுகாதாரக் கழிவுகள் என வகைப்படுத்தி சேகரிக்கும் பொறிமுறையின் ஊடாக தூய்மையான நகரத்தினை உருவாக்குவதற்கு உந்து சக்தியாக அமையும்.
இச்செயற்பாடானது தேசிய உபாயத்திற்கு (National strategies) அதாவது Refuse, Reduce, Reuse, Recycle இற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.