யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி ‘வடக்கு தென்னை முக்கோணம்” திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த இந்த வேலைத்திட்ட அங்குரார்பண நிகழ்வு மற்றும் முல்லைத்தீவு வட்டுவாகல் புதிய பால அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்கே எதிர்வரும் 2 ஆம் திகதி வருகை தரவுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
""நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம் " என்ற தொலைநோக்குக் கருப்பொருளின் கீழ், ஆரம்பிக்கப்படும் "வடக்குத் தென்னை முக்கோணம்" ஆனது, பருத்தித்துறை, சிலாவத்துறை, மற்றும் கொக்கிளாய் ஆகிய மூன்று நகரங்களை இணைத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களையும் உள்ளடக்கி செயற்படுத்தப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.