வருட இறுதியிலும் புதிய வருடத்தின் முற்பகுதியிலும் வானை அலங்கரிக்கும் பட்டக் காலம் தற்பொழுது வழமைபோல் ஆரம்பித்துள்ளது.
பட்டக் காலம் நாட்டின் வட பகுதியில் குறிப்பாக யாழில், வருடந்தோறும் நிகழும் வடகிழக்குப் பருவப்பெயர்சிக் காலநிலைக்கு (North East Monsoon) அமைவாகவே இடம்பெற்றுவருகின்றது. அதாவது இக்காலப் பகுதியில் காற்றானது வடக்கு தொடக்கம் வடகிழக்கு உட்பட்ட திசையில் சுமார் 7 இலிருந்து 27 (Beaufort Scale of Wind force 3 – 6) கடல் மைல்கள் வரையான வேகத்தில் வீசுகின்றன. இதுவே இக்காலப்பகுதியில் பட்டங்கள் விடப்படுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
யாழின் பல பகுதிகளில் பட்டங்கள் வானில் விடப்படுகின்றபோதும், வடமராட்சியில் அதுவும் குறிப்பாக வல்வெட்டித்துறை மற்றும் இதனை அண்டிய பகுதிகளிலேயே அதிகளவிலும் வித்தியாசமாகவும் பட்டங்கள் விடப்படுகின்றன.
வழமைபோல் இந்த வருகின்ற தைப் பொங்கல் அன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டப் போட்டி இடம்பெறவுள்ளது.
கீழே படங்களில் வல்வெட்டித்துறை வான் பரப்பில் கடந்த சில நாட்களாக வானில் பறக்கும் படங்களைக் காணலாம்.
வானை அலங்கரிக்கும் பட்டக் காலம் ஆரம்பம்Kites commence to beautify skies in Jaffnahttp://www.valvettithurai.org/kites-commence-to-beautify-skies-in-jaffna-5418.html
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.