யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு, கொழும்பு, இங்கிலாந்து, நியூசிலாந்து, டொராண்டோ கனடா ஆகிய இடங்களில் வசிப்பிடமாகவும் வாழ்ந்த திருமதி இந்திராணி சபாபதி அவர்கள் மார்கழி மாதம் பதினைந்தாம் நாள், இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டு டொராண்டோ, கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற Dr.சபாபதியின் அன்புமனைவியும்,
சபேசனின் அருமைத்தாயாரும்,
சாந்தியின் அன்புமாமியும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முதலியார் கார்த்திகேசு – ஞானசகுந்தலாவின் மூத்த புதல்வி ஆவார்.
காலஞ்சென்ற பண்டிதர் சபாபதி செல்லம்மா அவர்களின் மருமகள் ஆவார்.
காலஞ்சென்ற யோகாம்பிகையின் பெறாமகளும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களாகிய Dr.இராஜேந்திரன், பாலேந்திரன், மஹேந்திரன், சுரேந்திரன் மற்றும் குலேந்திரன் (Canada), உமாராணி(UK), ரூபராணி(UK), புவனராணி(Canada), ஹரீந்திரன்(USA), செல்வராணி(UK), ஞானேந்திரன்(UK) அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவராகிய Dr.ஆனந்தவேலின் மாற்று சகோதரமும் மற்றும் ஜெயராணியின் (VVT) மைத்துனியும் ஆவார்
அன்னார் காலஞ்சென்றவர்களாகிய M N விவேகானந்தன், நவசோதி, மற்றும் Dr.தங்கரூபன்(Canada), காலஞ்சென்றவராகிய Dr.குணானந்தம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னார் Dr.இந்திராதேவி(NZ), சுதந்திராதேவி(AUS), விஜயாள்கிருஷ்ணா(Canada), ஞானவதி(USA), சிவமனோஹரி(UK) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவரகளாகிய முத்துலக்ஷ்மி, ஆறுமுகநாதன் அவர்களின் அண்ணியும்,
காலஞ்சென்றவராகிய கணேசலிங்கம், மற்றும் விஜி(AUS) அவர்களின் அக்காவும் ஆவார்.
அன்னார் George Brown College Toronto இல் PSW (Personal Support Worker) பயின்று பட்டம் பெற்று கனடாவில் நர்சிங் அஸிஸ்ரன்ஸாக இதயபூர்வமாக மகிழ்ச்சியுடன் பணிபுரிந்தார்.
தனது இளமை வயதில் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியில் கலை, கர்நாடக சங்கீதம் கற்று தனது தேனிலும் இனிய குரலால் பாடி பலரை மகிழ்வித்தார். கல்வியை பயிலும் கால கட்டத்தில் நடனம், கர்நாடக சங்கீதம் போன்ற பல பாடசாலை நிகழ்வுகளில் முக்கிய பங்களித்து கல்லூரிக்கு பெருமையை சேர்த்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை
இறுதி கிரிகை விபரம் :
Day/ Date : Monday / December 22nd, 2025
Time : 1 pm - 3 pm EST.
Place:
Magnolia Room,
St. John's Dixie Cemetery & Crematorium,
737 Dundas St E, Mississauga,
Ontario,
L4Y 2B5,
Canada.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.