இன்றைய நாளில் - 'ஒபரேஷன் பவான்' - இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகள் இடையே ஆரம்பமான போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/10/2024 (வியாழக்கிழமை)
இன்றைய நாள் 10 அக்டோபர் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் (Indian Peace Keeping Force - IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே (Liberation Tigers of Tamil Eelam - LTTE) போர் ஆரம்பமாகியிருந்தது.
நல்லூரில் உண்ணாநோன்பு இருந்து மரணித்த திலீபனின் மரணமும் அதனைத் தொடர்ந்து சில நாட்களில் (05 அக்டோபர் 1987) பலாலியில் சயனைற் உட்கொண்டு மரணமான விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களான புலேந்திரன் மற்றும் குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் மரணமுமே குறித்த இந்த போருக்கு முக்கிய காரணங்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் முதற்படியாக இந்திய அமைதி காக்கும் படையினரால் புலிகளின் கோட்டையாக விளங்கிய யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவும், புலிகளின் ஆயுதங்களைக் களையவும் ஒபரேஷன் பவான் (Operation Pawan) என பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மார்ச் மாதம் 1990 ஆம் ஆண்டு வரை நீடித்த இச் சண்டையின் பின்னர், அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களிற்கும், அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும் இடையில். 1987 ஆண்டு ஜூலை மாதம் கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை (India-Sri Lanka Accord of July 1987) முழுமையாக நிறைவேற்றாமல் இந்திய அமைதி காக்கும் படையினர் தாயகம் திரும்பினர்.
இந்திய இராணுவ ராங்கி ஒன்றில் IPKF & LTTE
இந்தச் சண்டைகளில் 1155 இந்திய அமைதி காக்கும் படையினர் மரணமடைந்திருந்தனர் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் இழப்புக்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லாதபோதும் 7,000 வரையான பொதுமக்கள் மரணமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்ததாக அன்றைய செய்தித் தாள்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.