தங்கமான ஓர் ஆசான் - திரு கணபதி தங்கவடிவேல் ஆசிரியர் - திரு.வ. ஆ.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2014 (வெள்ளிக்கிழமை)
தங்கமான ஓர் ஆசான் - திரு கணபதி தங்கவடிவேல் ஆசிரியர்
மண்ணுலகை புறந்தள்ளி விண்ணுலக அகம் கொண்டார்
வல்வெட்டித்துறை கம்பர்மலையை சேர்ந்தவரும் ஒய்வு பெற்ற ஆசிரியரும் லண்டனை வதிவிடமாக கொண்டவருமான கணபதி தங்கவடிவேல் 29.07 செவ்வாய்க் கிழமை இரவு இறையடி எய்தினார்.
ஆரம்பகாலங்களில், இவர் வல்வை சிதம்பராக் கல்லூரி விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். யா/ வதிரி தேவராளி இந்துக் கல்லூரியிலே கல்வி கற்ற இவர் உரிய கற்கை நெறியினை மேற்கொண்டு தகுதி அடிப்படையிலே ஓர் ஆசிரியராக தெரிவு செய்யப் பெற்றார். இவர் ஆசிரியராக பணிபுரிந்த காலமுழுவதும் மாணவர்களின் கல்வி பணிக்கு தம்மை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார்.
அன்னார் மாணவர்களின் கற்கை நெறிகளில் மாத்திரமன்றி சங்கீதம், நாடகம், பட்டிமன்ற நிகழ்வுகள் போன்ற கலைகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டியதுடன், மிகுந்த ஆர்வமும் கொண்டு இக்கலைகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டியதுடன், மிகுந்த ஆர்வமும் கொண்டு இக்கலைகளிலும் மாணவர்களுக்கு திறமான ஓர் ஆசானாக செயற்பட்டார்.
யா/ கம்பர்மலை வித்தியாலய ஆரம்ப கர்த்தாக்களில் இவரும் ஒருவர் ஆவார். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலே நீண்டகாலமாக ஆசிரியராக பணிபுரிந்தார். கம்பர்மலை "யங்கமன்ஸ்" விளையாட்டுக்கழகம், பொன் கந்தையா சன சமூக சேவா நிலையம் மற்றும் கலாவாணி சனசமூக சேவா நிலையம் ஆகியவற்றின் ஸ்தாபகராகவும், செயல் உறுப்பினராகவும் அமைந்திருந்து சேவைகள் பல செய்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார்.
விளையாட்டுத்துறையை பொறுத்த வரையிலே மிகுந்த ஆர்வமுடையவராக விளங்கியதுடன், ஆரம்ப கால வல்வையின் கைப்பந்தாட்ட அணியிலும் இடம் பெற்று விளங்கினார். கைப்பந்தாட்டத்தை பொறுத்த வரையில் இவர் பறந்தடி வீராகவும் செயற்பட்டு வந்தார்.
இவர் தமது பிற்காலங்களில் வல்வையில் புகழ் பெற்று திகழ்ந்த வல்வை கல்வி மன்றத்தின ஓர் ஆசிரியராக அமைந்திருந்து மாணவர்களின் நிலைமைகளை அவதானித்து அவர்களின் நிலைமைகளுக்கேற்ப பாடங்களை போதித்தார்.
மிக நேர்த்தியான தமிழ் எழுத்துக்களுடன், பாடங்களிற்கு ஏற்ற தத்ரூபமான ஓவியங்களுடன் தமிழை மாணவர்களிற்கு கொண்டு சேர்ப்பதில் மிகவும் வெற்றி பெற்றிருந்தார்.
மேலும் தமிழ் பாடத்தில் இலக்கிய, இலக்கண முறைகளிலே நல்ல முறையில் உள்ளடக்கி உரிய முறையிலே மாணவர்களுக்குரிய போதனைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
நாட்டார் பாடல்கள், கம்பராமாயாணம் மற்றும் மகாபாரதம் போன்றவற்றை கற்பிப்பதில் தன்னக்கென ஒரு முறையினை வைத்திருந்ததார்.
அன்னார் சில காலங்களுக்கு முன்பு தமது உடன் பிறந்த சகோதரியை பார்த்து செல்வதற்காக லண்டனில் இருந்து ஊருக்குவந்து சென்றமை மனங்கொள்ளத்தக்க ஒன்றாகும்.
அன்னார் தமது 80 வயதிலே எம்மிடமிருந்து பிரிந்து சென்றமை மிகவும் வேதனைக்குரியதுடன், ஆசிரியர் சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் பேரிழப்பாகும்.
அன்னாரின் பிரிவிற்காக அன்புள்ளங்களுடன் வல்வெட்டித்துறை.orgயும் துயரினை பகிர்ந்து கொள்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.