வல்வையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும் இந்த இணையதளத்தின் போஸகருமான திரு.குட்டிப்பிள்ளை அப்பாத்துரை (வல்வையூர் அப்பாண்ணா) இன்று காலை காலமானார். இவருக்கு வயது 81. கடந்த சில நாட்களாக சுகவீனம் காரணமாக வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமானார்.
60 களில் வல்வையில் ஆரம்பிக்கப்பட்ட இரவுப் பாடசாலையின் ஸ்தாபர்கர்களில் ஒருவரான இவர் தனியார் ஆசிரியராகவும் இவரின் இளமைக் காலத்தில் கடமையாற்றியிருந்தார்.
ரேவடி விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினரான இவர் சிறந்த அறிவிப்பாளாராகவும் விளங்கியிருந்தார்.
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டியை தனது சொந்த முயற்சியில் வெளியிட்டிருந்தார்.
பல தமிழக திருக்கோவில்கள் தர்சித்து அவை சம்பந்தமான கட்டுரைகளையும், வாரம் ஒரு பழம்கதை என்னும் தலைப்பில் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுரைகளை இந்த இணைய தளம் வாயிலாக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எழுதியிருந்தார்.
அத்துடன் வல்வெட்டித்துறை சம்பந்தமான பழைய பல அரிய தகவல்களை அறிந்த ஒரு சிலரில், திரு.அப்பாத்துரையும் ஒருவர் ஆவார். குறிப்பாக வல்வையில் உள்ள ஆலயங்கள் தொடர்பான பல தகவல்களை தன்னகத்தே கொண்டிருந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உண்டு. அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று வல்வையில் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S. Rajendra (UK)
Posted Date: January 02, 2024 at 16:45
I share the grief of master's loss. I am immensely proud that I worked with him to educate the kids at "Iravup Pada Salai". He is one of the noble persons I will remember until I join him. May his soul rest in peace.
Rajkumar Periyathamby (Canada)
Posted Date: December 16, 2023 at 14:32
ஆழ்ந்த இரங்கல்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.