பண்டாரவளை, தெமோதரை பகுதியில் அடிப்படையற்ற வீட்டில் வசிக்கின்ற பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு,
வீடு திருத்தச் செலவுகளிற்காக 150,000 ரூபா நிதி வழங்கப்பட்டது.
பண்டாரவளை, அம்பதன்ன பகுதியில் வசிக்கின்ற பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான குடும்பத் தலைவனின் இருதய அறுவைச் சிகிச்சைக்காக ஒரு தொகுதி நிதியாக 100,000 ரூபா நிதி வழங்கப்பட்டது.
பதுளை மாவட்டம் டொட்லேண்ட் பிரிவு, சாரணியா குரூப் பகுதியில் அமைந்துள்ள,
ஶ்ரீ சிவசுப்பிரமணியம் ஆலயத்தின் வர்ணம் பூசுவதற்காக 150,000 ரூபா நிதி ஆலய நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
30/09/2026 ந்திகதி புதன்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் 1.45 மணி வரை இடம்பெற்ற இவ் உதவித் திட்ட நிகழ்வில்,
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார். (உடுப்பிட்டி செய்திகள்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.