பிரபாகரன் பிறந்த வீட்டில் நூலகம், படிப்பு கூடம் அமைக்க முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2026 (திங்கட்கிழமை)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த வீட்டில் நூலகம் மற்றும் படிப்பு கூடம் (Liberary and Study hall) அமைதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில், ஆலடி ஒழுங்கையில் குறித்த வீடு அமைந்திருந்தது. இது 80 களின் பிற்பகுதியில் முதலில் எரிக்கப்பட்டு, பின்னர் முழுவதமாக இடித்து அழிக்கப்பட்டது.
திரு வே.பிரபாகரன் அவர்களின் பெற்றோருக்கு சொந்தமான குறித்த காணி, தற்பொழுது பிரபாகரன் அவர்களின் சகோதரி திருமதி ஜெகதீஸ்வரி மதியாபரணம் அவர்களின் பெயரில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.,
அவர்களின் (சகோதரி) பெயரில் அமைந்த நூலகம் மற்றும் பொது மண்டபம் ஆகியவைகளை உள்ளடக்கிய, சமூக வலைத் தளத்தில் பகிரப்பட்டுள்ள, மாதிரி வரைபடம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.