சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச் சிலைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் - மானிப்பாய் வீதி, கோம்பயன் மணல் சுற்று வட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சைவ மகா சபையினால் உருவாக்கப்பட்ட சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலையை தென் கயிலை ஆதீனகுரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ் மாநகரசபை முதல்வர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதனையடுத்து யாழ் மாநகரசபையால் பாரதியாரின் திருவுருவச் சிலையை யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா மற்றும் யாழ் மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி றெயிடியாஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.