படத்தில் காணப்படுவது புராதான குளம் ஒன்றாகும். இது தொண்டைமனாற்றுப் பகுதியில் தொண்டைமனாறு - வல்லை வீதியில் கரும்பாழி (கருகம்பாவெளி, கரும்பாவளி) என்னும் பகுதியில் வெல்லங்கராய் சுடலைக்கு அண்மையில் அமைந்துள்ளது.
நீர்மட்டம் மிகவும் உயர்ந்த மிகவும் கற்பாறைகளைக் கொண்டுள்ள பகுதியில் செயற்கையாக மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களால் நெடுங்காலமாக இக்குளம் தற்பொழுதும் பாவிக்கப்பட்டுவருகின்றது. மேலும் இப்பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளிற்கும் இக்குளத்திலுள்ள நீர் பாவிக்கப்பட்டுவருகின்றது.
உள்ளூர் வாசிகளின் தகவல்களின் படி, சுமார் 2 வருடங்கள் முன்பு இக்குளம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள வந்திருந்த சில பல்கலைகழக மாணவர்கள் இப்பகுதியில் இக்குளம் பற்றி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை அகற்ற முற்பட்டதாகவும், உள்ளூர் வாசிகள் இதைத்தடுத்ததாயும், ஆனாலும் சம்பவத்திற்கு மறு நாள் குறித்த கல்வெட்டு மாயாமாகி விட்டதாயும் தெரிவிக்கின்றனர்.
இவை இப்பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்ததை சாட்சி பகிர்வதாயும் கூறப்படுகின்றது..
குளத்திற்கான பிரதான தொண்டைமானாறு வல்லை வீதி
குளத்திற்கான பாதை
தொண்டைமானாறு சுண்டிக்குளம் ஏரியின் ஒரு பகுதி
குளத்திற்கான பாதையில் அமைந்துள்ள சுடலை
குளத்திற்கு அருகில் அமைந்துள்ள பற்றை மரங்கள்
எரியும் குப்பைக் கிடங்கு ?
வரலாற்று குளம்
குளம் மற்றும் அதனுடன் கூடிய காட்சிகள்
குளத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படும் மாடு வளர்ப்பு
குளத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படும் புகையிலைச் செய்கை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.