திரு தாமோதரம் பிள்ளை மணிவாசகர் அவர்கள் பிரபல கப்பல் துறை முகவரும், தொழிலதிபரும் ஆவார்.
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
வல்வெட்டித்துறையின் ஒரு தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர் எங்கள் மணியண்ணா யாராலும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.
ஆரம்பத்தில் அவர் ஞானக்கோன் ஐயா அவர்களுடன் வேலை செய்த காலத்தில் Tradent Transport என்கின்ற Greek கம்பனிக்கு எங்கள் ஊர் இளைஞர்களை அனுப்பியிருந்தார்.
பின்னர் 70 வதுகளின் முற்பகுதியில் அண்ணா அவர்கள் அவருடைய நண்பர்களான Capt. Charls மற்றும் அவரின் சகோதரர்களுடன் இணைந்து Cross World Navigation என்ற கப்பல் கம்பெனியை ஆரம்பித்து எங்கள் ஊரில் இருந்து பல மாலிமிகளை உருவாக்கியதோடு பல படித்த இளைஞர்களை Cadet Officers ஆக அனுப்பி அவர்களை எல்லாம் Captains களாக உருவாக்கியவர் என்றால் மிகை ஆகாது. அதில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
இன்று எமது ஊரில் முறையாகப் படித்து Captain ஆனவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றால் அந்தப் பெருமை எங்கள் மணி அண்ணாவைத்தான் சேரும்.
இத்தனைக்கும் அவர் ஒருவரிடமும் பணம் வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால்தான் ஆரம்பதிலேயே சொல்லியுள்ளேன் “இவர்போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று‘.
இத்தனையும் செய்துவிட்டு இன்று எம்மையெல்லாம் மிகவும் துயரில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்துவிட் டார்.
எங்கள் மணியண்ணாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வோம்.
அண்ணாவின் குடும்பத்தருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துத்துக்கொள்வோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.