மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி நேற்றைய தினம் (21) பிற்பகல் காலமானார். இவருக்கு வயது 61.
கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்னர் ஆசிரியராகப் பணியாற்றிய ஜெயானந்தமூர்த்தி, பின்னர் வீரகேசரி மற்றும் தமிழ்நெட் ஊடகங்களின் மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளராகவும் சேவையாற்றியிருந்தார்.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற அவர், 2010 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.