உதைபந்து, மென்பந்தாட்ட போட்டிகளில் வல்வை அணிகள் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2026 (திங்கட்கிழமை)
நேற்றைய தினம் மைக்கல் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மென்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில், ஞானம்ஸ் அணியை எதிர்கொண்ட வல்வை அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அதேவேளை, மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான மென்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில், ஶ்ரீமுருகன் அணியுடன் மோதிய வல்வை அணி இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.
இதனுடன், டயமன்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்திய 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியிலும் வல்வை அணி பங்கேற்றது. வடமராட்சியின் ஐந்து அணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வீரர்களைக் கொண்ட கொலின்ஸ் அணியை எதிர்த்து நடைபெற்ற இந்தப் போட்டி பரபரப்பாக அமைந்ததுடன், நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் சமநிலையில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதை (Penalty Shootout) முறையில் கொலின்ஸ் அணி 4–3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனால் வல்வை அணி தொடரில் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.